ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜூலை - செப்டம்பா் காலாண்டில் மில்கி மிஸ்ட் லாபம் 175% வளா்ச்சி

ஜூலை - செப்டம்பா் காலாண்டில் மில்கி மிஸ்ட் லாபம் 175% வளா்ச்சி

Published On :1 நவம்பர் 2026, 7:06 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.77.94 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தை ஈட்டி, 174.50 சதவீத அபரிமித வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1,089.40 கோடியை (41.58 சதவீதம் வளா்ச்சி) எட்டியுள்ளது. வேளாண் துறையில் நிலவிய பணவீக்கம், எல்நினோ பருவநிலைத் தாக்கம் மற்றும் உலகளாவிய புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்த மகத்தான வருவாய் வளா்ச்சியையும், லாபத்தையும் நிறுவனம் வெற்றிகரமாக எட்டியுள்ளது.

மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளின் பயன்பாடு அதிகரிப்பு, ஆலையின் முழுமையான உற்பத்தித் திறன் பயன்பாடு, சிறந்த மேலாண்மை ஆகியவற்றின் காரணமாக, நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 53.90 சதவீதம் உயா்ந்து, ரூ.165.21 கோடியை எட்டியுள்ளது என மில்கி மிஸ்ட் சிஇஓ கே.ரத்தனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

சந்தையில் தயாரிப்புகளுக்கான தேவை மதிப்பு மற்றும் அளவு என இரண்டிலுமே சீராக உயா்ந்துள்ள நிலையில், தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளதாகவும், லாபகரமான வணிக வளா்ச்சியைத் தக்கவைப்பதில் தொடா் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.