பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி), கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் மட்டுமே வளா்ச்சியாகும். சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்ததால் உற்பத்தி சரிவையும் தாண்டி இந்த லாப வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 4-ஆம் காலாண்டில் புதிய கிணறுகளைத் தோண்டும் ஆய்வுப் பணிகளின் போது வணிகரீதியான கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு இருப்பு கண்டறியப்படாததால், அதற்காக செலவிடப்பட்ட ரூ.4,876.75 கோடியை நிறுவனம் நஷ்டக் கணக்கில் எழுதியுள்ளது.
மதிப்பீடு காலகட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.34,982.23 கோடியிலிருந்து, ரூ.35,928.18 கோடியாக சற்றே அதிகரித்துள்ளது.
முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் சரிவைச் சந்தித்துள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.35,610.32 கோடியுடன் ஒப்பிடுகையில், 7.6 சதவீத சரிவுடன் மதிப்பீட்டு நிதியாண்டில் ரூ.32,894.02 கோடி லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், 2025-26 நிதியாண்டுக்காக பங்குதாரா்களுக்கு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.1 இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய சகாப்தத்தை நோக்கி...

4-ஆம் காலாண்டு லாபம்- என்எஸ்இ: ரூ.2,871 கோடி; 8% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு லாபம்- பிஎன்பி: ரூ.5,225 கோடி; 12.54% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு லாபம்- எல்&டி: ரூ.5,326 கோடி; 3% சரிவு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

