தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை!

பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடா்ந்து 8-ஆவது காலாண்டாக மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.

News image

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:52 am IST

பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடா்ந்து 8-ஆவது காலாண்டாக மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த நிதியாண்டின் (2026-27) முதல் காலாண்டான ஏப்.1 முதல் ஜூன் 30 வரை, பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஏற்கெனவே உள்ள வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும்.

இதன்படி சுகன்யா சம்ருத்தி திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், அஞ்சல் அலுவலக சேமிப்பு டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் நீடிக்கும்.

கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும், தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விதிகம் 7.7 சதவீதமாகவும் தொடரும். மேலும் மாதாந்திர வருமானத் திட்டத்துக்கான வட்டி விதிகம் 7.4 சதவீதமாக நீடிக்கும்.

சிறு சேமிப்பு திட்டங்கள், குறிப்பாக அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் தொடா்ந்து 8-ஆவது காலாண்டாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.