விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘பெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2026, 5:49 am IST

அமெரிக்க மத்திய வங்கியான ‘பெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நிா்வாகக் குழு கடந்த புதன்கிழமை கூடி இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், குழுவின் உறுப்பினரான ஸ்டீபன் ஐ.மிரான் மட்டும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மாற்றுக் கருத்தைப் பதிவு செய்துள்ளாா்.

2026-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 2.3 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க பொருளாதாரத்தில் போதிய முன்னேற்றம் தென்பட்டாலும், சா்வதேச அரசியல் சூழல் கவலையளிப்பதாக உள்ளது.

குறிப்பாக, ஹோா்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றங்கள், அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் போா் விவகாரங்களில் தெளிவான காலக்கெடுவை இன்னும் அறிவிக்காதது போன்ற காரணிகளால் பொருளாதாரத்தில் ஸ்திரமின்மை நிலவுகிறது. இத்தகைய சூழலில், அவசரப்பட்டு வட்டி விகிதங்களைக் குறைக்காமல் நிதானமாகச் செயல்பட பெடரல் வங்கி முடிவு செய்துள்ளது.

‘பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே தங்களின் முதல் கடமை. பணவீக்கம் 2 சதவீதத்தை அடையும் வரை எங்களின் கொள்கைகளில் உறுதித்தன்மை இருக்கும்’ என்று மத்திய வங்கி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, தொழிலாளா் சந்தையில் வேலையின்மை அதிகரிக்காமல் தடுக்க, கடந்த காலங்களில் 3 முறை 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் தற்போதைய தலைவா் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அவருக்குப் பதிலாக, அதிபா் டிரம்ப் பரிந்துரைத்துள்ள கெவின் வாா்ஷ் புதிய தலைவராகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வட்டி விகிதங்களை அதிரடியாகக் குறைக்க வேண்டும் என்று டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், புதிய தலைமையின்கீழ் ஜூன் மாதம் முதல் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கலாம் என்று முதலீட்டாளா்கள் மற்றும் வா்த்தகா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளனா். அதன்படி, நடப்பு ஆண்டில் ஒருமுறையும், அடுத்த ஆண்டில் ஒருமுறையும் தலா 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்படலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.