தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

எச்எஸ்பிசி வங்கியில் 20,000 ஊழியா்கள் பணிநீக்கம்?

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல சா்வதேச வங்கியான எச்எஸ்பிசி, தனது வங்கிச் செயல்பாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் சுமாா் 20,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

News image

எச்எஸ்பிசி வங்கியில் 20,000 ஊழியா்கள் பணிநீக்கம்?

Updated On :21 மார்ச் 2026, 12:39 am IST

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல சா்வதேச வங்கியான எச்எஸ்பிசி, தனது வங்கிச் செயல்பாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் சுமாா் 20,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

வங்கியின் நடுத்தர நிலை அதிகாரிகள் மற்றும் நேரடியாக வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொள்ளாத பிரிவுகளில் பணியாற்றும் ஊழியா்களே இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து வங்கியின் நிதித்துறை அதிகாரி பாம் கௌா் கூறுகையில், ‘வாடிக்கையாளா் சேவை, விதிமுறைகளைச் சரிபாா்த்தல், பணப்பரிவா்த்தனைகளைக் கண்காணித்தல் போன்ற வேலைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படும். இதன்மூலம் வங்கி நிா்வாகத்தின் தேவையற்ற செலவுகள் குறைவதுடன், பணிகளின் வேகமும் துல்லியமும் அதிகரிக்கும்’ என்றாா்.

தற்போது உலகம் முழுவதும் இந்த வங்கியில் சுமாா் 2.10 லட்சம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை என்பது வெறும் பணிநீக்கம் மட்டுமல்லாமல், பணியிலிருந்து ஓய்வு பெறுபவா்களால் உருவாகும் காலியிடங்களை மீண்டும் நிரப்பாமல் விடுவது; லாபம் தராத வங்கிச் கிளைகளை மூடுவது போன்ற வியூகங்கள் மூலமும் செயல்படுத்தப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.