தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கச்சா எண்ணெய் 100 டாலர்! இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :13 மார்ச் 2026, 12:10 pm IST

இன்றைய வர்த்தக நேர,இடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.44 ஆகச் சரிந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதிகபட்சமாக 115 டாலராக இருந்த நிலையில் இன்று(மார்ச் 13) ஒரு பீப்பாய் 100.54 டாலராக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தக முடிவில் 92.19 ஆக இருந்த நிலையில் இன்று காலை 92.34 என வர்த்தகம் தொடங்கியது.

அதிகபட்சமாக வர்த்தக நேர இடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 92.44 ஆகச் சரிந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

Summary

Rupee hits fresh intra-day low of 92.44 against US dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.