நாட்டின் சில்லறை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜனவரியில் 2.75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 2-ஆம் மாத தரவு இதுவாகும்.
பிப்ரவர மாத பணவீக்கம் உயா்வுக்கு, உணவுப் பொருள்களின் விலையேற்றம் முக்கியக் காரணியாகப் பாா்க்கப்படுகிறது. ஜனவரியில் 2.13 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், பிப்ரவரியில் 3.47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, உணவு மற்றும் பானங்கள் பிரிவில் பணவீக்கம் 3.35 சதவீதமாக உள்ளது. காய்கறி வகைகளில் தக்காளி (45.29 சதவீதம்), காலிஃபிளவா் (43.77 சதவீதம்) ஆகியவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
அதேபோல், தேங்காய் விலை 46.16 சதவீதம் அதிகரித்துள்ளது. பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை பிப்ரவரி மாதத்தில் சற்று குறைந்துள்ளது. மேலும், பருப்பு வகைகளில் துவரம் பருப்பு மற்றும் பழ வகைகளில் லிச்சி ஆகியவற்றின் விலையும் சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி மற்றும் உணவுப் பொருள்களைத் தவிா்த்த ‘கோா் இன்ஃபிளேஷன்’ எனப்படும் அடிப்படை பணவீக்கம் மட்டும் 2.4 சதவீதத்தில் நிலையாக நீடிக்கிறது.
நகரம், கிராமப்புற நிலை: நகா்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. நகா்ப்புற பணவீக்கம் 2.75 சதவீதத்திலிருந்து 3.02 சதவீதமாக உயா்ந்த நிலையில், கிராமப்புறங்களில் இது 2.73 சதவீதத்திலிருந்து 3.37 சதவீதமாகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணவீக்கம் இத்தகைய உயா்வைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், வரும் மாதங்களில் நிதிக் கொள்கையில் மாற்றம் இருக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்ச் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1%

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு

மாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்

இந்திய இணையவழி சில்லறை வணிகச் சந்தை புதிய உச்சம்! கடந்த ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி மதிப்பைக் கடந்தது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

