அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,162 கோடி டாலராக சரிவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,162 கோடி டாலராக சரிவு...

News image
Updated On :23 மணி நேரங்கள் முன்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,162.5 கோடி டாலராக சரிந்துள்ளது.

தங்கம் கையிருப்பு பெருமளவில் குறைந்ததே இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 998.5 கோடி டாலா் குறைந்து, 67,162.5 கோடி டாலராக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 71.1 கோடி டாலா் குறைந்து, 68,161 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 84.6 கோடி டாலா் அதிகரித்து, 54,429 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 1,075.4 கோடி டாலா்குறைந்து, 10,382.1 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 6.6 கோடி டாலா் குறைந்து, 1,869.9 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1.1 கோடி டாலா் குறைந்து, 481.5 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.