டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்துக்குச் சொந்தமான, பிரிட்டனைச் சோ்ந்த பிரபல ‘நாா்டன்’ நிறுவனம், இந்தியாவில் தங்களின் புதிய 2 இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இந்தியச் சாலைகளில் ஏற்கெனவே பலமுறை சோதிக்ப்பட்ட ‘அட்லஸ்’, ‘அட்லஸ் ஜிடி’ ஆகிய 2 மாடல்களின் முழு தொழில்நுட்ப விவரங்களை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
கரடுமுரடான ‘அட்வென்ச்சா்’ பயணங்களுக்காக ‘அட்லஸ்’ மாடலும்; நெடுஞ்சாலைப் பயணங்களை அதிகம் விரும்புவோருக்காக ‘அட்லஸ் ஜிடி’ மாடலும் சக்கரம், சன்பென்ஷன், இருக்கை உயரம் ஆகிய அம்சங்களில் வேறுபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரு மாடல்களிலும் புதிய 585 சிசி என்ஜின்; 6 ஸ்பீடு கியா்பாக்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. வழித்தட வழிகாட்டி, 8 அங்குல தொடுதிரை, ஏபிஎஸ், குரூஸ் கண்ட்ரோல், 5 ரைடிங் மோடுகள் என ஏராளமான பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதிகளும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.
டிவிஎஸ் நிறுவனத்தின்கீழ் இந்த இருசக்கர வாகனங்கள் விரைவில் சந்தைக்கு வரவுள்ள நிலையில், விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூா்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அசாமில் இந்திய விமானப் படை விமானம் விபத்து!

துல்லிய தாக்குதல் திறன் கொண்ட 106 டா்போஜெட் ட்ரோன்கள்: ராணுவத்துக்கு விநியோகித்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம்

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்திய ஜீ நிறுவனம்

இந்தியாவில் ‘கிம்ப்டன்’ சொகுசு விடுதி
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

