பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!

இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - ANI

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பங்குச்சந்தைகள் 2 நாள் சரிவுக்குப் பிறகு நேற்று(செவ்வாய்) உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்றும் (ஜூன் 10, புதன்) உயர்ந்து வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,988.27 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 601.70 புள்ளிகள் உயர்ந்து 74,515.72 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 161.50
புள்ளிகள் உயர்ந்து 23,403.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.11 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 0.39 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

நிஃப்டி 50 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, டாடா நுகர்வோர் பொருள்கள் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்துள்ளன.

துறைவாரியாக நிஃப்டி எஃப்எம்சிஜி 1% உயர்ந்தது. ஐடி, பார்மா, தனியார் வங்கிகள், எண்ணெய் & எரிவாயு ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் உலோகம், ஆட்டோ பங்குகள் சரிந்து வருகின்றன.

சென்செக்ஸில் 30ல் 20க்கும் அதிகமான நிறுவனப் பங்குகள் லாபமடைந்து வருகின்றன. ரிலையன்ஸ், இன்போசிஸ், சன் பார்மா, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து 95.54 ஆக உள்ளது.

Summary

Stock Market: Sensex at dayhigh, up 550 pts, Nifty near 23,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.