பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூ.19.72 லட்சத்தில் டொயோட்டோ இன்னோவா கிரிஸ்டா 2026!

ரூ.19.72 லட்சத்தில் டொயோட்டோ இன்னோவா கிரிஸ்டா 2026 மாடல் கார் அறிமுகம்

News image

டொயோட்டோ இன்னோவா கிரிஸ்டா

Updated On :4 ஜூன் 2026, 4:26 pm IST

கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள டொயாட்டோ நிறுவனம், 2026 மாடல் இன்னோவா கிரிஸ்டா காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சில உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தோற்றத்திலும் புதுப்பொலிவை கொடுத்திருக்கிறது. இந்த வகை கார் 7 பேர் இருக்கை மற்றும் 8 பேர் இருக்கை என இரண்டு வகைகளில் உள்ளன. இதன் விலை ரூ.19.72 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா கிரிஸ்டாவின் 2026 மாடலானது, ஒரு தனித்துவமான புதிய கிரில் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன் தோற்றம் மற்றும் பின்பக்க பம்பர்களுடன் வருகிறது. இதில் இரட்டை வண்ண லெதர் இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட உட்புற டிரிம், காப்பர் பெசல்கள் மற்றும் மர வடிவமைப்பு போன்றவை சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.

டொயோட்டா, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் TPMS போன்ற புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளது வரவேற்பைப் பெறும்.

டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிடி, ஸ்டியரின்-மௌண்டட் கட்டுப்பாடுகள், 7 ஏர்பேகுகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, பிரேக் அசிஸ்ட், விஎஸ்சி, மலை ஏற்றத்தின்போது உதவும் கட்டுப்பாடு போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்னோவா கிரிஸ்டா ஐந்து நிறங்களில் வருகிறது. பிளாட்டினம் வொய்ட் பேர்ல், சூப்பர் வொய்ட், சில்வர் மொடாலிக், ஆட்டிடியூட் பிளாக் மிகா, அவந்த் - கார்டே ப்ரோன்ஸ் மெடாலிக் நிறங்களில் அசத்துகின்றன.

இந்த விலைகள் அதன் வகைப்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

ஏழு இருக்கைகள் கொண்ட கார் (அடிப்படை விலை)

GX / GX Fleet – Rs 19,72,000

GX+ - Rs 21,15,000

VX – Rs 24,93,000

ZX – Rs 26,63,000

எட்டு இருக்கைகள் கொண்ட கார் (அடிப்படை விலை)

GX / GX Fleet – Rs 19,77,000

GX+ - Rs 21,20,000

VX – Rs 24,98,000 என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

Toyota Innova Crysta 2026 model car launched at Rs. 19.72 lakhs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.