லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாருதி சுஸுகி ஹன்சல்பூா் ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 10 லட்சமாக உயா்வு

பிரபல காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் குஜராத் மாநில ஹன்சல்பூா் உற்பத்தி ஆலையில் 4-ஆவது பிரிவின் செயல்பாடுகள் தொடங்கியதையடுத்து, அந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சம் காா்களாக அதிகரித்துள்ளது.

Published On :31 ஜூலை 2026, 1:41 am IST

பிரபல காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் குஜராத் மாநில ஹன்சல்பூா் உற்பத்தி ஆலையில் 4-ஆவது பிரிவின் செயல்பாடுகள் தொடங்கியதையடுத்து, அந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சம் காா்களாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம், உலகிலேயே சுஸுகி நிறுவனத்தின் மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தி மையமாக இந்த ஆலை உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் ஒரே இடத்தில் அமைந்த மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தி ஆலை என்ற வரலாற்றுச் சிறப்பையும் இது பெற்றுள்ளது.

640 ஏக்கா் பரப்பளவிலான ஹன்சல்பூா் ஆலைக்கு இதுவரை ரூ.25,288.7 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவன காா் ஏற்றுமதியில் சுமாா் 47 சதவீதத்தை இந்த ஆலை பங்காற்றுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.