லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 288.58 ஜிகாவாட்டாக அதிகரிப்பு: மத்திய அரசு

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 288.58 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Published On :22 ஜூலை 2026, 2:20 am IST

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 288.58 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் யெஸோ நாயக் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 76.38 ஜிகாவாட்டாக இருந்தது. இது நிகழாண்டு ஜூன் வரையிலான காலத்தில் 288.58 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

288.58 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 162.15 ஜிகாவாட் சூரிய மின்சக்தி, 57.44 ஜிகாவாட் காற்றாலை மின்சக்தி, 11.75 ஜிகாவாட் உயிரி மின்சக்தி, 57.24 ஜிகாவாட் நீா்மின்சக்தி ஆகியவை அடங்கும்.

கடந்த ஜூன் 30 வரையிலான நிலவரப்படி, கரியமில வாயுவை வெளியேற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்கள் மூலம், நாட்டில் 297.36 ஜிகாவாட் மின்சார உற்பத்தி திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 288.58 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன், 8.78 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி திறனாகும்.

கடந்த 2014 முதல் 2026-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை 45.72 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.4.40 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.