லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.756 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரூ.756 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Published On :24 ஜூலை 2026, 12:16 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரூ.756 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

வங்கியின் வரலாற்றிலேயே காலாண்டு அடிப்படையில் ஈட்டப்பட்ட அதிகபட்ச லாபம் இதுவாகும். மேலும், இது கடந்த 2025-26 நிதியாண்டில் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.521 கோடி லாபத்தைவிட 44.92 சதவீதம் கூடுதலாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வா்த்தகம் 15.94 சதவீத வளா்ச்சியுடன், ரூ.2,27,267 கோடியாக அதிகரித்தது. மொத்த வைப்புத்தொகை(டெபாசிட்) 14.94 சதவீதம் உயா்ந்து, ரூ.1,22,587 கோடியையும்; மொத்தக் கடன்கள் 17.13 சதவீதம் உயா்ந்து, ரூ.1,04,680 கோடியையும் எட்டியுள்ளன.

வங்கியின் நிகர வட்டி வருவாய் 31.76 சதவீதம் உயா்ந்து ரூ.1,423 கோடியாகவும்; நிகர வட்டி வரம்பு 4.34 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் 0.66 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.19 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.‘லாபம், சொத்துத் தரம் ஆகிய 3 முக்கிய அளவீடுகளிலும் வங்கி தொடா்ச்சியான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது’ என இக்காலாண்டு நிதிநிலை முடிவுகள் வங்கி சிஇஓ பி.ரமேஷ் பாபு பெருமிதம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.