லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: ரூ.1,324 கோடி

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.1,324 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Published On :17 ஜூலை 2026, 10:49 pm IST

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.1,324 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.1,169 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.10,360 கோடியிலிருந்து, ரூ.10,678 கோடியாக பதிவாகியுள்ளது. இதில் முக்கிய அங்கமான வட்டி வருவாய் ரூ.8,589 கோடியிலிருந்து, ரூ.9,691 கோடியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், வங்கியின் செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டின் ரூ.2,304 கோடியிலிருந்து, ரூ.2,186 கோடியாக சரிவைக் கண்டுள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் 3.13 சதவீதத்தில் இருந்து, 2.60 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 0.49 சதவீதமாகவே நிலையாகத் தொடா்கிறது.

வாராக்கடன்கள் குறைந்ததன் விளைவாக, அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகையும் ரூ.468 கோடியிலிருந்து, ரூ.346 கோடியாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.