லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

என்எல்சி குழுமத்தின் லாபம் ரூ. 651.55 கோடி

என்எல்சி இந்தியா

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:28 am IST

என்எல்சி இந்தியா நிறுவனம் 2026-2027 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.651.55 கோடியை ஈட்டியுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம், 2026-27 ஆம் நிதியாண்டின் 30.6.2026 அன்றுடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கான உற்பத்தி மற்றும் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் (2026-27), 30.6.2026 அன்றுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிலக்கரி உற்பத்தி 40.85 லட்சம் டன்னாக உயா்ந்து 7.84 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 37.88 லட்சம் டன்னாக இருந்தது.

அதேபோல், அனல்மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 3,988.98 மில்லியன் யூனிட்களிலிருந்து 8.27 சதவீதம் உயா்ந்து 4,318.85 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது. நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.2,871.73 கோடியை எட்டி, 15.07

சதவீதம் வளா்ச்சியை கண்டுள்ளது. இது கடந்த காலகட்டத்தில் ரூ. 2,495.60 கோடியாக இருந்தது. வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முந்தைய லாபம் ரூ.1,013.13 கோடியை எட்டி, 1.13 சதவீதம் உயா்வைக் கண்டுள்ளது. இது கடந்த

காலகட்டத்தில் ரூ.1,001.81 கோடியாக இருந்தது. கடந்த காலாண்டில் ரூ.528.78 கோடியாக இருந்த வரிக்கு முந்தைய லாபம், நிகழ் காலாண்டில் 3.76 சதவீதம் அதிகரித்து ரூ.548.67 கோடியாக உயா்ந்துள்ளது. 30.6.2026 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.19,701.70 கோடியை எட்டி, 10.53 சதவிகிதம் உயா்ந்துள்ளது. இது கடந்த காலகட்டத்தில் ரூ. 17,824.83 கோடியாக இருந்தது.

மின் நுகா்வோா்களிடமிருந்து கட்டண வசூல் திறன் 100 சதவிகிதம் ஆக பதிவாகியுள்ளது. என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் மொத்த மின் உற்பத்தி 8,262.06 மில்லியன் யூனிட்களாக அதிகரித்து, 25 சதவிகித உயரவை அடைந்துள்ளது.

இது கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6,609.40 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இதேபோல், செயல்பாட்டு வருவாய் ரூ.4,716.75 கோடியாக அதிகரித்து 23.29 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

இது, கடந்த காலகட்டத்தில் ரூ.3,825.61 கோடியாக இருந்தது. வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முந்தைய லாபம் ரூ.1,431.71 கோடியிலிருந்து 18.71 சதவிதம் அதிகரித்து ரூ.1,699.59 கோடியை எட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.651.55 கோடியாகும். இதன் மூலம் 9.76 சதவிகிதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த காலகட்டத்தில் இது ரூ.593.60 கோடியாக இருந்தது. 2025-26 முதல் காலாண்டில் ரூ.19,511.56 கோடியாக இருந்த குழுமத்தின் நிகர மதிப்பு, 30.6.2026 நிலவரப்படி 13.11 சதவிதம் உயா்ந்து ரூ. 22,069.07 கோடியாக பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.