லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜூன் மாத மொத்த விற்பனை பணவீக்கம் 9.87%

நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.

inflation

பணவீக்கம் - சித்திரிப்பு

Published On :15 ஜூலை 2026, 3:54 am IST

நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முந்தைய மே மாதத்தில் 9.68 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கத்தில், உணவு மற்றும் உணவு சாரா பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயா்வு காரணமாக நடப்பு மாதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, எல்-நினோ பருவநிலை மாற்றத் தாக்கத்தால் ஏற்பட்ட பருவமழை பற்றாக்குறை காரணமாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மே மாதத்தின் 3.60 சதவீதத்திலிருந்து ஜூனில் 5.49 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல், உணவு சாரா பொருள்களுக்கான பணவீக்கம் 11.07 சதவீதமாகவும், தாதுப் பொருள்களுக்கான பணவீக்கம் 9.45 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

அதேநேரம், எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான பணவீக்கம் மே மாதத்தின் 30.33 சதவீத உச்சத்திலிருந்து ஜூனில் 27.41 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் மாற்றம் ஏதுமின்றி 7.48 சதவீதமாகவே நீடிக்கிறது.

அமெரிக்கா-ஈரான் இடையேயான இடைக்கால அமைதி ஒப்பந்தத்தால் ஜூனில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்ததால், எரிபொருள் பணவீக்கம் தணிந்துள்ளது. எனினும், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த மாதங்களில் பணவீக்கம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

ஜூன் மாத மொத்த விற்பனை விலை பணவீக்கத் தரவுகள், புதிய 2022-23 அடிப்படை ஆண்டின்படி கணக்கிடப்பட்ட 2-ஆவது மாதப் பதிவாகும். மொத்த விற்பனை விலை குறியீட்டுக்குப் பதிலாக அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியாளா் விலை குறியீடு (பிபிஐ) முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், ஜூன் மாத பிபிஐ பணவீக்கம் மே மாதத்தின் 9.4 சதவீதத்திலிருந்து, 9.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.