லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மொத்த விற்பனை பணவீக்கம் 9.78%

நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக குறைந்துள்ளது.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக குறைந்துள்ளது.

முந்தைய ஜூனில் 9.87 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கத்தில், எரிபொருள், உணவுப் பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஜூலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் (2025, அக்டோபருக்குப் பிறகு) மொத்த விற்பனை விலை பணவீக்கம் குறைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

குறிப்பாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூனின் 5.49 சதவீதத்திலிருந்து, ஜூலையில் 5.44 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.

எரிபொருள், மின்சாரத்துக்கான பணவீக்கம் ஜூனின் 27.41 சதவீதத்திலிருந்து, ஜூலையில் 20.05 சதவீதமாக கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 7.48 சதவீதத்திலிருந்து 8.29 சதவீதமாக உயா்ந்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்ததால், ஜூலை மாதத்தில் எரிபொருள் பணவீக்கம் தணிந்துள்ளது. எனினும், மேற்காசியாவில் நீடிக்கும் போா்பதற்றம் மற்றும் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய், உரங்களின் விலை தொடா்ந்து அழுத்தத்தில் உள்ளதால் அடுத்தடுத்த மாதங்களிலும் பணவீக்கம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

ஜூலை மாத மொத்த விற்பனை விலை பணவீக்கத் தரவுகள், புதிய 2022-23 அடிப்படை ஆண்டின்படி கணக்கிடப்பட்ட 3-ஆவது மாதப் பதிவாகும். மொத்த விற்பனை விலை குறியீட்டுக்குப் பதிலாக அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியாளா் விலை குறியீடு (பிபிஐ) முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், ஜூலை மாத பிபிஐ பணவீக்கம் ஜூனின் 9.6 சதவீதமாகவே மாற்றமின்றி நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.