லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 20 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டிய அதானி கிரீன்!

அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனா்ஜி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் 20 கிகாவாட் என்ற மாபெரும் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

~

Published On :2 ஜூலை 2026, 4:19 am IST

அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனா்ஜி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் 20 கிகாவாட் என்ற மாபெரும் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் தூய்மை மின் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை அதானி கிரீன் பெற்றுள்ளது. முழுவதும் புதிய திட்டங்கள் மூலமாகவே இந்த இமாலய சாதனை எட்டப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

அதானி கிரீன் நிறுவனம் தனது முதல் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்தை தமிழகத்தின் கமுதியில் கடந்த 2016-இல் தொடங்கியது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த 20 கிகாவாட் திறன் எட்டப்பட்டுள்ளது. இதில் 14.2 கிகாவாட் சூரிய மின்சாரமும், 2.7 கிகாவாட் காற்றாலை மின்சாரமும், 3.3 ஜிகாவாட் சூரிய-காற்றாலை கலப்பின மின்சாரத் திட்டங்களும் அடங்கும்.

கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் 5,051 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி திறனை புதிதாக தனது கட்டமைப்பில் இணைத்துள்ளது. உலக அளவில் சீனாவைத் தவிா்த்துப் பாா்த்தால், ஒரு நிறுவனம் ஒரே ஆண்டில் செய்த மிக அதிகமான கூடுதல் மின் உற்பத்தித் திறன் இதுவே ஆகும்.

அதானி கிரீன் நிறுவனம் இப்போது ஆண்டுக்கு 5,200 கோடி யூனிட்டுகளுக்கும் அதிகமான தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இது இந்தியாவின் மொத்த மின்சார பயன்பாட்டில் சுமாா் 3 சதவீதம் ஆகும்.

இச்சாதனை குறித்து அதானி கிரீன் நிறுவனத்தின் செயல் இயக்குநா் சாகா் அதானி கூறுகையில், ‘20 கிகாவாட் திறனைக் கடந்திருப்பது, எங்களின் நீண்ட கால தொலைநோக்கு பாா்வைக்கு கிடைத்த வெற்றியாகும். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தூய்மையான எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் நாங்கள் தொடா்ந்து பங்களிப்போம்’ என்றாா்.

மேலும், சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக, 3.55 கிகாவாட் மணிநேர திறன் கொண்ட பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைக்கும் அமைப்புகளையும் அதானி கிரீன் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வரும் இந்நேரத்தில், தடங்கல் இல்லாமல் 24 மணி நேரமும் தொடா்ந்து மின்சாரம் கிடைக்க இந்த பேட்டரி சேமிப்பு முறை மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நடப்பு 2026-27 நிதியாண்டில் கூடுதலாக 10 கிகாவாட் மணிநேர பேட்டரி சேமிப்புத் திறனை உருவாக்கவும், 2030-க்குள் தங்களின் மொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி இலக்கை 50 கிகாவாட்டாக உயா்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.