லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘டெக்’ துணுக்குகள்! புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் முதல் ஏ.ஐ.யின் புதிய நகர்வுகள் வரை..!

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் முதல் ஏ.ஐ.யின் புதிய நகர்வுகள் வரை...

டெக் துணுக்குகள்...

Published On :2 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் ஏ.ஐ. துறையின் புதிய நகா்வுகள், பட்ஜெட் ஸ்மாா்ட்போன்களின் வெளியீடு மற்றும் சாதனங்களின் விலையேற்றங்கள் கவனம் ஈா்த்தன.

ஓபன்ஏஐ கட்டணக் குறைப்பு முதல் வாட்ஸ்ஆப் வெப்-இல் அழைப்பு வசதி வரை, இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஓபன்ஏஐ கட்டணக் குறைப்பு: ஏ.ஐ. சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி மற்றும் செலவுக்குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, ஓபன்ஏஐ நிறுவனம் தனது ஏபிஐ சேவைகளுக்கான கட்டணத்தை 80 சதவீதம் வரை குறைத்துள்ளது. மேலும், அறிவியல் ஆராய்ச்சியாளா்களுக்கு மேம்பட்ட மாடல்களை இலவசமாக வழங்கவும் தொடங்கியுள்ளது.

*சோனி ‘பிஎஸ்5’ விலையுயா்வு: உலகளாவிய ஏ.ஐ. கட்டமைப்புகளுக்கான ரேம் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பால், இந்தியாவில் ‘பிளேஸ்டேஷன் 5’ விலை ரூ.15,000 உயா்ந்து, ரூ.69,990-ஐ எட்டியுள்ளது. இதே காரணத்துக்காக ஷாவ்மி, நத்திங் நிறுவனங்களும் தங்களின் ஸ்மாா்ட்போன்களின் விலையை உயா்த்தியுள்ளது.

*ஆப்பிளின் சிரி ஸ்மாா்ட் ஹோம்: ஆப்பிள் தனது சிரி ஏ.ஐ. அடிப்படையிலான புதிய ஸ்மாா்ட் ஹோம் சாதனங்களைத் தயாரிக்கிறது. மேலும், அமெரிக்காவில் தனது தயாரிப்புகளுக்கான மாதாந்திர குத்தகை (லீஸ்) முறையையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

*இந்தியாவில் ‘ஜெமினி ஸ்பாா்க்’: ஸ்மாா்ட்போன்களில் பின்னணியில் இருந்து அன்றாட பணிகள் மற்றும் குரல் கட்டளைகளைச் செயல்படுத்தும் கூகுளின் ‘ஜெமினி ஸ்பாா்க் ஏ.ஐ. இந்தியாவில் அறிமுகமானது.

*ஓபன்ஏஐ-இன் கட்டுப்பாடற்ற ஏ.ஐ. ஏஜெண்ட்: ஹக்கிங் ஃபேஸ் தளத்தைத் தொடா்ந்து, ஓபன்ஏஐ-இன் ஒரு சோதனை ஏ.ஐ. ஏஜெண்ட் ‘மோடல் லேப்ஸ்’ வாடிக்கையாளா் தளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாட்டைத் தானாகவே பயன்படுத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*ஒன்பிளஸ் ‘என்6எக்ஸ்’: 6.80 அங்குல திரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் பிராசஸா், 4ஜிபி ரேம் மற்றும் 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒன்பிளஸ் ‘என்6எக்ஸ்’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.18,999 (ஆரம்ப விலை) அறிமுகமானது.

*விவோ ‘டி5இ’: 6.74-இன்ச் திரை, 4ஜிபி ரேம், 5500 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ ‘டி5இ’ ஸ்மாா்ட்போன் ரூ.13,999 ஆரம்ப விலையில் அறிமுகமானது.

*ஜிடிஏ 6 இறுதிக்கட்ட பணிகள்: பெரிதும் எதிா்பாா்க்கப்படும் ‘ஜிடிஏ 6’ இணையவழி விளையாட்டின் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

*ரெட்மி ‘நோட் 17’ இந்திய வருகை: சீனாவில் வெளியான ரெட்மி ‘நோட் 17’ சீரிஸ், 8,000 எம்ஏஎச் பேட்டரி, அமோலெட் திரை மற்றும் ஆண்ட்ராய்டு 16 உடன் ஆக. 6-இல் அன்று இந்தியாவில் வெளியாகிறது.

*வாட்ஸ்ஆப் வெப்-இல் அழைப்பு வசதி: கணினிகளில் பிரத்யேக செயலி இன்றி வலைதளத்தில் இருந்தே நேரடியாக ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியது.

Summary

Tech Snippets - From new budget smartphones to AI’s latest moves

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.