தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள், நிஃப்டி 320 புள்ளிகள் சரிந்துள்ளதைப் பற்றி...

News image

பங்குச்சந்தை..

Updated On :30 ஏப்ரல் 2026, 10:23 am IST

பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் முடிந்திருந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இன்று காலை (ஏப்.30) பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஏப்.30) காலை 10.10 மணியளவில் 1,050 புள்ளிகள் சரிந்து 76,449.28 ஆகவும், அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 317.60 புள்ளிகள் சரிந்து 23,860.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவை தொடர் சரிவுக்கு காரணமாக அமைந்திருப்பதாகப் பங்குச்சந்தை முதலீட்டு வியூக வகுப்பாளர்கள் கூறுகின்றனர்.

நிஃப்டி50-ல் ஐடி பங்குகள் மட்டும் கணிசமான லாபத்தை எட்டின. இன்போஸிஸ், விப்ரோ ஆகியவையும், கோல் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை கணிசமான லாபம் பார்த்தன.

ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஜியோ ஃபினான்சியல் சர்விஸ், அபோலோ ஆகியவை 1 முதல் 3 சதவிகித சரிவைச் சந்தித்தன. இண்டியோ விமான நிறுவனம் 4 சதவிகிதம் வரை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் ரூ. 94.82 என்ற அளவில் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று காலை 2.5 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் 120 டாலருக்கு மேல் விற்பனையாகி வருவதால், இன்று காலை 9 மணி நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா அதிகரித்து ரூ. 95.07 ஆக வர்த்தகமாகி வருகின்றது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான நிறுவன பங்குகள் உயர்வு, நிஃப்டி 24,000-க்கும் கீழ் வீழ்ச்சி ஆகியவை முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Summary

Sensex Today | Nifty falls further, falls below 23,850; Rupee falls to 95.27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.