தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாா்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:28 am IST

நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியா் நிறுவனத்தின் பாா்சல் வணிகத்தை மேம்படுத்த இருதரப்பும் புதிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த இருதரப்பு ஒத்துழைப்பு, தற்போதைய ஒப்பந்தத்தின்மூலம் அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.

தபால் துறையின் பாா்சல் இயக்குநரக பொது மேலாளா் நீரஜ் குமாா் ஜா, டிடிடிசி நிறுவனத்தின் தேசிய தலைவா் ஜதிந்தா் சேத்தி ஆகியோா் முன்னிலையில் கையொப்பமான இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1.64 லட்சம் தபால் நிலையங்களை டிடிடிசி நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு இணையவழி வணிகத் தயாரிப்புகளை மிக விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் விநியோகிக்கும் வசதி மேம்படும்.

இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இரண்டு நிறுவன அதிகாரிகளும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.