ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று (ஏப். 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதீத பேட்டரி மற்றும் கேம்ரா திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஸ்மார்ட்போன்கள் தயரிக்கப்பட்டுள்ளன.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில் ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய ரக விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த சிறப்புகளை பார்க்கலாம்.
ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ சிறப்பம்சங்கள்
இரு ஸ்மார்ட்போன்களும் 7,000mAh பேட்டரி திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது.
பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவத் லென்ஸ் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அடிப்படையான புகைப்படங்களுக்கும் அதிதிறன் வாய்ந்த புகைப்படங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்காது.
ஓப்போ கலர் ஓஎஸ் ஆண்டிராய்டு உடையவை.
எனினும், ஓப்போ எஃப்33 ப்ரோ மாடலில், 6.57 அங்குல அமோலிட் திரை கொடுக்கப்பட்டுள்ளது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பக்க செல்ஃபி கேமரா கூடுதல் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வண்ணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
6GB + 128GB நினைவகம் உடைய எஃப் 33 ஸ்மார்ட்போன் விலை ரூ. 31,999.
8GB + 128GB நினைவகம் உடைய எஃப் 33 ஸ்மார்ட்போன் விலை ரூ. 34,999.
8GB + 256GB நினைவகம் உடைய எஃப் 33 ஸ்மார்ட்போன் விலை ரூ. 39,999..
இதேபோன்று 8GB + 128GB நினைவகம் உடைய எஃப் 33 ப்ரோ விலை ரூ. 37,999
8GB + 256GB நினைவகம் உடைய எஃப் 33 ப்ரோ விலை ரூ. 40,999
Summary
Oppo F33, F33 Pro 5G smart phone launched in India: Check price, specs, and features
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவில் சோனி பிஎஸ்5 ப்ரோ விலை என்ன? மகிழ்ச்சி தகவல்

‘டெக்’ துணுக்குகள்..

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


