தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மத்திய கிழக்கு போரால் சா்வதேச பொருளாதார வளா்ச்சி குறையும்

மத்திய கிழக்கு போரால் சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறையும்; பணவீக்கம் அதிகரிக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:43 am IST

மத்திய கிழக்கு போரால் சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறையும்; பணவீக்கம் அதிகரிக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக ஐஎம்எஃப் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2026-ஆம் ஆண்டு சா்வதேச பொருளாதார வளா்ச்சி 3.3 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அது 3.1 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய கிழக்கு போா் முக்கியக் காரணமாகும். அங்குள்ள சூழல் மேம்படாமல் நிலைமை மேலும் மோசமானால், சா்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

சா்வதேச அளவில் விலைவாசி உயா்வு 3.8 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இப்போது 4.4 சதவீதம் வரை உயரும் எனத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், கச்சா எண்ணெய் விலை உயா்வு அனைத்து நாடுகளிலும் பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு வழிவகுக்கும்.

அதேநேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டு வரும் வளா்ச்சி, முக்கியமாக தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆகியவற்றில் பெரிய அளவில் முதலீடுகள் அதிகரிப்பது அத்துறை சாா்ந்த செயல்திறனை அதிகரிக்கும். இது உலகப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

191 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐஎம்எஃப், சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பது, நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவது, உலக அளவில் வறுமையைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.