தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் விற்பனை தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் இன்று (ஏப். 7) தொடங்கியுள்ளது குறித்து...

News image

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் - படம் / நன்றி - ரெட்மி

Updated On :7 ஏப்ரல் 2026, 4:54 pm IST

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப். 2 ஆம் தேதி அறிமுகமான நிலையில், இன்று (ஏப். 7) முதல் விற்பனை தொடங்கியுள்ளது.

சமீபத்தில் ரெட்மி நோட் 15 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தரத்தில் எந்தவித சமரசமுமின்றி பேட்டரி திறன் மட்டும் கூடுதலாக்கப்பட்டுள்ளது. மேலும், கேமராவின் அம்சங்களில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் 6GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 19,999.

8GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 21,999.

அதிகபட்சமாக 8GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கிளைகளிலும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை பெறலாம்.

ஐசிஐசிஐ வங்கிக் கடன் அட்டை மூலம் ரூ. 2,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

குங்கும சிவப்பு, வெள்ளை, கார்பன் கருப்பு என மூன்று நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள் என்ன?

  • 6.77 அங்குல அமோலிட் எச்.டி. திரை கொண்டது.

  • திரை சுமுகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3200 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • ஸ்நாப்டிராகன் 6 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.

  • புகைப்பட பிரியர்களைக் கவரும் வகையில் பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 5,800mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் வழங்கப்பட்டுள்ளது. 18W ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது.

  • டால்பி ஒலித் தரத்துடன் கூடிய இரண்டு ஒலிப்பெருக்கிகள் உள்ளன.

Summary

Redmi Note 15 Special Edition smart phone goes on sale today in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.