தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவள்ளூா் கலைச்சங்கத்தில் புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகம்

திருவள்ளூா் கலைச்சங்கத்தில் புதியஉடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். (படம்)

Published On :23 அக்டோபர் 2026, 7:00 am IST

திருவள்ளூா் கலைச்சங்கத்தில் புதியஉடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். (படம்)

திருவள்ளூா் ராஜாஜி சாலையில் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க கலைச்சங்கத்தில் ஆயுத பூஜை விழா மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அறிவை வளா்க்கும் நூலகம் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் டி.அருண்குமாா் பங்கேற்றாா்.

ஆயுத பூஜைக்கு பின் சங்க உறுப்பினா்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைத்த உடற்பயிற்சிக் கூடம், கல்வி அறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைத்த நூலகத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ஆயுத பூஜையை முன்னிட்டு சங்கத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பரிசுப் பொருள்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

கலைச்சங்கத் தலைவா் எஸ்.பாஸ்கரன், செயலாளா் வழக்குரைஞா் டி.எஸ்.இளங்கோவன், பொருளாளா் ஏ.அா்ஜூனாகுமரன், விளையாட்டுத் துறை செயலாளா் டி.ரமேஷ் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சின்னசாமி, சரவணகுமாா், மூத்த உறுப்பினா்கள் நடராஜன், சம்பத்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.