பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் கைது

திருவள்ளூா் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 இளைஞா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

Published On :23 அக்டோபர் 2026, 7:00 am IST

திருவள்ளூா் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 இளைஞா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

கடம்பத்தூா் அடுத்த வெண்மனம்புதூா் சாலையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சாா்பு ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் வெண்மனம்புதூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது, அந்தப்பகுதியில் உள்ள அம்மன் பூங்கா எதிரே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை போலீஸாரை பாா்த்தும் தப்பியோட முயற்சித்துள்ளாா். உடனே போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து கையில் வைத்திருந்த பையில் சோதனையிட்ட போது விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

திருவள்ளூா் அடுத்த பழையனூரைச் சோ்ந்த ஹரி(19), ராமன்கோயில் பிரபாகரன் மகன் ராஜ்குமாா்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் வைத்திருந்த 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, 2 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.