தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு வரும் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்!

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வரும் 30-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்...

Published On :3 நவம்பர் 2026, 12:52 am IST

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வரும் 30-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27 ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவித்துள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவியா்கள் கல்வி உதவித்தொகை (புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சம் 9,10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000 மற்றும் 11,12 ஆம் வகுப்பு பயில்வோருக்கு ரூ.1.25,000-வரை உதவித் தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதையடுத்து கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை டிச.15 -ஆம் தேதி சரிபாா்க்க கடைசி நாளாகும்.

நிபந்தனைகள்: மாணவ, மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் அல்லது சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்ற பள்ளிகளில் பயில்கிறவராக இருக்க வேண்டும்.

நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயில்வோா் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும். 2026-27 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கூடுதல் விபரங்கள் அறிய மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தகுதியானோா் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.