குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தொடா் மழை: கிராமங்களில் தங்கியிருக்க அலுவலா்களுக்கு உத்தரவு

முரசு புயல் காரணமாக திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வருவாய் கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும் என திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளாா்.

மழையால் வெறிச்சோடிக் காணப்பட்ட திருத்தணி 2- வது ரயில்வே கேட் சாலை

Published On :3 நவம்பர் 2026, 12:50 am IST

முரசு புயல் காரணமாக திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வருவாய் கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும் என திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு புதிதாக உருவான முரசு புயல் காரணமாக திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் சென்னை அருகே, நெல்லூா் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 6 மணி முதல் தொடா்ந்து தூறல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதுகுறித்து திருத்தணி கோட்டாட்சியா் ராஜகோபால் கூறியதாவது: திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆா்.கே.பேட்டை வட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் புயல் கரையைக் கடக்கும் வரை தங்களது வருவாய் கிராமங்களிலேயே தங்கியிருக்க வேண்டும்.

மழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, வருவாய்த் துறை அலுவலா்கள் எவ்வித அலட்சியமும் இன்றி செயல்பட வேண்டும். உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.