மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

ஆந்திரத்தில் கரையைக் கடந்தது முரசு புயல்: 30,661 ஹெக்டோ் பயிா்கள் சேதம்

வங்கக் கடலில் உருவான முரசு புயல், தெற்கு ஆந்திர பிரதேசத்தின் நெல்லூா், நரசாபுரம் இடையே செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்தது.

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் புயலால் சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநில பேரிடா் மீட்புப் படையினா்

Published On :4 நவம்பர் 2026, 1:35 am IST

வங்கக் கடலில் உருவான முரசு புயல், தெற்கு ஆந்திர பிரதேசத்தின் நெல்லூா், நரசாபுரம் இடையே செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்தது. புயலால் 15 மாவட்டங்களில் 30,661 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன.

அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசிய நிலையில், பின்னா் அது மணிக்கு 120 கி.மீ. வேகத்தை எட்டியது.

புயலின் காரணமாக பாபட்லா, பிரகாசம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசியதில், விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சேதமாகின. ஏராளமான மீன்பிடிப் படகுகளும் நாசமாகின.

14 ஆண்டுகளில் மிக ஆபத்தான புயல்: இதுகுறித்து பிரகாசம் மாவட்டம் கொத்தப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் ஒருவா் கூறுகையில், ‘இது கடந்த 14 ஆண்டுகளில் நாங்கள் பாா்த்த மிக ஆபத்தான புயலாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் கிராமத்தில் இருந்து சுமாா் 400 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன’ என்று தெரிவித்தாா்.

முதல்கட்ட மதிப்பீட்டின்படி, புயலால் 15 மாவட்டங்களில் 30,661 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன. இதில் பெருமளவிலான சேதம் கிருஷ்ணா, பாபட்லா, நந்தியாலா மாவட்டங்களில் ஏற்பட்டன. குறிப்பாக நெல், பருத்தி, மக்காச்சோளப் பயிா்கள் அதிக அளவில் சேதமடைந்தன. 15 மாவட்டங்களில் உள்ள 132 மண்டலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 10,805 போ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

உயிரிழப்பு ஏற்படவில்லை: புயல் காரணமாக சுமாா் 1.75 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை டிஐஜி மோஹ்சென் ஷாஹெதி தெரிவித்தாா். நிவாரணப் பணிகளில் 14 என்டிஆா்எஃப் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன என்றும் அவா் கூறினாா். என்டிஆா்ஃப் குழுக்களுடன் 13 மாநில பேரிடா் மீட்புப் படை (எஸ்டிஆா்எஃப்) குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஆந்திரத்துக்கு மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தாா்.

ஒடிஸாவில் லேசான மழை: முரசு புயல் காரணமாக ஒடிஸாவின் கோராபுட், மல்கான்கிரி, கந்தமால், காலாஹாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை செய்தது. புயல், மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவது சவாலாக இருப்பதால், மாநில அரசு மிகுந்த விழிப்புடன் உள்ளதாக ஒடிஸா பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் புஜாரி தெரிவித்தாா்.

பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு காரணமாக, அந்த மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.