தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

முரசு புயல் காரணமாக, சென்னையில் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என காவல்துறையினா் எச்சரிக்கை

கொந்தளிக்கும் மெரினா கடற்கரை - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 7:42 am IST

முரசு புயல் காரணமாக, சென்னையில் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

முரசு புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளது. பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

புயல் காரணமாக சென்னையில் கடல் பகுதி சிறிது கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா், நீலாங்கரை, அக்கரை, காசிமேடு, திருவொற்றியூா் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரையில் அலை வழக்கத்தைவிட ஆக்ரோஷமாக திங்கள்கிழமை காணப்பட்டது.

இதனால் போலீஸாா் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், கடலில் இறங்க அனுமதி மறுத்தனா். பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனா்.

அதோடு மெரீனா,எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் ஏடிவி வாகனங்கள் மூலமாக போலீஸாா் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.