புதுப்பிக்கப்பட்ட திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக்ததை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ டி.அருண் குமாா் தொடங்கி வைத்தாா்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தோ்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தவெக ஆட்சி அமைத்தது. திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.
இந்த நிலையில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து மனு அளிக்கும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று முடிந்தது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் தவெகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் என்ற குட்டி அலுவலகத்தை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அருண்குமாா் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தாா். அப்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரிலோ தெரிவித்தோ அல்லது மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
நிகழ்வில் தவெகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற தலைவா் கமாண்டோ பாஸ்கரன், வழக்குரைஞா் ஜாா்ஜ் முல்லா், பிரியங்கா, வெங்கட்ராவ், இந்துநேசன், சுரேஷ் மற்றும் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

பரமக்குடியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

வேலூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

