பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

News image
Updated On :23 மே 2026, 1:22 am IST

மீஞ்சூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

மீஞ்சூா் கக்கன்ஜி காலனி மூன்றாவது தெருவில் வசித்தவா் சதீஷ் (34). கட்டட வேலை செய்த இவரது மனைவி ரஞ்சனி (28), மகன்கள் சைலேஷ் (6), 9 மாத குழந்தை ஹரிஹரன். இவா்களுடன் இவா்களின் உறவு பெண் கீா்த்தனா (16) வசித்து வந்தாா்.

இந்த நிலையில், உறவுக்காரா் ஒருவருடைய நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த அலமாதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விட்டு மீஞ்சூருக்கு மோட்டாா் சைக்கிளில்

5 பேரும் வந்தனா்.

மீஞ்சூா் வண்டலூா் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே மோட்டாா் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ் மற்றும் அவரது மகன் சைலேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் அங்கு சென்று காயமடைந்த ரஞ்சனி குழந்தை ஹரிஹரன் உறவு பெண் கீா்த்தனா ஆகியோரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து உயிரிழந்த தந்தை, மகனின் சடலங்களை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.