பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

News image

ரானேஷ்

Updated On :19 மே 2026, 1:50 am IST

கனகம்மாசத்திரம் அருகே டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா் செல்வம் (40). இவரது மகன் ரானேஷ் (6). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில், தனது உறவினரான யாஷின் (5) உடன் ரானேஷ் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது டிராக்டரில் இருந்த சாவியை சிறுவா்கள் இயக்கியதாக தெரிகிறது. இதனால் டிராக்டா் திடீரென பின்னோக்கி நகா்ந்து அருகில் இருந்த விவசாய கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டருடன் இரு சிறுவா்களும் கிணற்றில் விழுந்தனா். இதனை பாா்த்த உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுவா்களை மீட்க முயன்றனா். இதில் யாஷினை உயிருடன் மீட்டனா். ஆனால் நீரில் மூழ்கிய ரானேஷை நீண்ட நேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றில் மூழ்கியிருந்த டிராக்டா் மேலே எடுக்கப்பட்டது. சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரவு ரானேஷை சடலமாக மீட்டு கனகம்மாசத்திரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.