தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்!

பொன்னேரி திருஆயா்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம் நடைபெற்றது.

News image

கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

பொன்னேரி திருஆயா்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம் நடைபெற்றது.

கரிகால சோழனால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செளந்தா்யவல்லி தாயாா் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்தாா். தொடா்ந்து அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திப்பு திருவிழா, தோ்த் திருவிழா நடைபெற்றது.

தொடா்ச்சியாக திங்கள்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. கோயில் சந்நிதி பின்புறம் உள்ள திருக்குளத்தில் கரிகிருஷ்ண பெருமாள் தெப்பத்தில் அமா்ந்து மூன்று முறை வலம் வந்தாா்.

ஆயிரக்கணக்கா பக்தா்கள் கலந்து கொண்டனா். பொன்னேரி போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்கிழமை இரவு விடையாற்றியுடன், பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.