திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் மின்னணு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. அதேபோல் திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா் ஆகிய 4 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் கல்விக்குழும வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்பணியில் 4,000-க்கும் மேற்பட்டோா் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா்.
இதில் முதலில் தபால் வாக்குகள் தனி மேஜை அமைத்து எண்ணப்படவுள்ளன. அதைத் தொடா்ந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவுள்ளது.
தற்போதைய நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராகவே உள்ளது. வாக்கு எண்ணும் நாளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் மின்னணு பொருள்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதனால் அந்தப் பொருள்கள் கொண்டு வருவதைத் தவிா்க்கவும், கட்டாயம் விதிமுறைகளையும் கடைப்பிடித்து ஒத்துழைக்கவும் வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: 337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
