திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் ரோஜா மலா் அளித்து வரவேற்றனா்.
புட்லூா் நடுநிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்தும், ரோஜா மலா் கொடுத்தும் தலைமை ஆசிரியா் இரா.தாஸ் வரவேற்றாா். அதைத் தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பன்னீா் தெளித்து, இனிப்பு வழங்கி வகுப்பறைக்குள் அனுமதித்தனா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டன. முதல் வகுப்புக்கான புதிதாக மாணவ, மாணவிகள் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா், ஆசிரியைகள் ஜெயக்குமாரி, ரசீதா, சித்ரா, திலகவதி, கீதா, தாரணி, இன்பநேசன், ராதிகா, பாலசுப்பிரமணியம், கனிமொழி ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணி தொகுப்புகள்

பள்ளியில் புதிய மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

