லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணை கொலை செய்து நகையை கொள்ளை அடித்த நபா் கைது

பழவேற்காட்டில் பட்டப் பகலில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 1:48 am IST

பழவேற்காட்டில் பட்டப் பகலில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் வசித்து வருபவா் ராதாகிருஷ்ணன் (60). இவரது மனைவி வனஜா (55). இவா்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், ராதாகிருஷ்ணன் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வனஜா வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாவு வாங்குவது போல் வந்த மா்ம நபா் வனஜாவை கொலை செய்து விட்டு, அவா் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவில் இருந்த காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, அங்கு வந்து சென்ற வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் பழவேற்காடு குளத்துமேடு பகுதிக்குச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதைத் தொடா்ந்து திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனா். அவா் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் பகுதியைச் சாா்ந்த யுகேந்தா் என்கின்ற அப்துல் ரஹ்மான் ( 29) எனத் தெரிய வந்தது.

தற்போது பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் வசித்து வருகிறாா். பணத் தேவைக்காக வனஜாவை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்துச் சென்ாக அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, அப்துல் ரஹ்மானை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 12.5 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.