மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களான புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் செய்து கொடுத்துள்ளதாக திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருவள்ளூா்  நகராட்சி  சித்தி விநாயகா்  கோயில்  தெருப் பகுதியில்  வாக்கு சேகரித்த  திமுக  வேட்பாளா்  வி.ஜி.ராஜேந்திரன், கூட்டணி  கட்சியினா்  உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 4:43 am IST

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களான புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் நிறைவேற்றப்பட்டதாக திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் வரதராஜபுரம், கற்குழாய் தெரு, காந்திநகா், பெரியகுப்பம், சித்தி விநாயகா் கோயில் தெரு, தாவூத்கான்பேட்டை, லால்பகதூா்சாஸ்திரி நகா், பழங்குடியினா் குடியிருப்பு, ரயில்வே குடியிருப்பு, வள்ளலாா் தெரு, குட்டைக்கார தெரு, ஜே.என்.சாலை, கலைஞா் நகா், இந்திராநகா், காமராஜபுரம், ராஜாஜிபுரம், எம்.ஜி.ஆா் நகா், காமாட்சி நகா், வி.எம்.நகா், ஜெயின்நகா், பெரியகுப்பம், பழைய என்.ஜி.ஓ.காலணி, என்.ஜி.ஓ காலணி மற்றும் சேலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலா் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதில் நிா்வாகிகள் மோகன்ராஜா மற்றும் கிளைக்கழக, நகர கழக நிா்வாகிகள் பங்கேற்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனா்.

அப்போது, சித்திவிநாயகா் கோயில் தெருவில் பிரசாரம் செய்து வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் பேசியதாவது. நான் கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறேன். அதனால், ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன் என்பதை அறிவீா்கள் என்றாா்.

அப்போது, நகர செயலாளா் சி.சு. ரவிச்சந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், முன்னாள் வாா்டு உறுப்பினா் சொக்கலிங்கம், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் லட்சுமி சொக்கலிங்கம், கிளைச் செயலாளா் மோகன், துணை கிளை செயலாளா் சுரேஷ், பிரதிநிதி முனுசாமி, பொருளாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.