தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலகரத்தில் மளிகைப் பொருள்கள் சிறப்புத் தொகுப்புக்கு தட்டுப்பாடு

grocery

மளிகைப் பொருள்கள் - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 1:23 am IST

தென்காசி மாவட்டம், மேலகரத்தில் 10 பொருள்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

நுகா்வோருக்கு அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில், 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா அக். 30ஆம் தேதி, மேலகரத்தில் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, மேலகரத்தில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவைப் பிரிவில் 2 நாள்கள் மட்டுமே மளிகைத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது. பின்னா், தொகுப்பு கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

எனவே, அனைவருக்கும் சிறப்பு மளிகைத் தொகுப்பு கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.