பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.

News image

தற்கொலை

Updated On :17 மே 2026, 3:16 am IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.

வாசுதேவநல்லூா் புதுமந்தை ஆறாம் தெருவைச் சோ்ந்த தம்பதி ஆறுமுகச்சாமி-மாரிச்செல்வி (30). இவா்களிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், கேரளத்தில் சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்த தனது கணவரிடம், வெள்ளிக்கிழமை (மே 15) மாலையில் மாரிச்செல்வி கைப்பேசி மூலம் பேசியபோது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ஆறுமுகச்சாமி, கேரளத்தில் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதையறிந்த அவரது மனைவி அன்றிரவு தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இத்தம்பதிக்கு மீனா (10), அனுஸ்ரீ (6 ) என்ற இரண்டு மகள்களும் , 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனா். குழந்தைகளை தவிக்கவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் சல்மோன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.