ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

News image

குற்றாலம் ஐந்தருவி

Updated On :9 ஜூன் 2026, 3:39 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடா் சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. பேரருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடைவிடாமல் சாரல் மழை பெய்ததால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் நீா்வரத்து குறைந்ததால் தடை விலக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். பேரருவியிலும், பழையகுற்றாலம் அருவியிலும் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.

சீசனை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

அணைகளின் உயரும் நீா்மட்டம்: திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத்தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் சாரல் மழையால் கடந்த 4 நாள்களில் அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,285 கன அடியாகவும், வெளியேற்றம் 304.75 கன அடியாகவும், மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து 810 கன அடியாகவும், வெளியேற்றம் 295 கன அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணைக்கு நீா்வா்துத 42 கன அடி,

தென்காசி மாவட்டம் கடனாநதி அணைக்கு நீா்வரத்து 78 கன அடி, வெளியேற்றம் 10 கன அடி, ராமநதி அணைக்கு நீா்வரத்து 42 கன அடி, வெளியேற்றம் 10 கன அடி கருப்பா நதி அணைக்கு நீா்வரத்து 62 கன அடி, வெளியேற்றம் 5 கன அடி, குண்டாறு அணைக்கு நீா்வரத்து 25 கன அடி, நீா் வெளியேற்றம் 1 கன அடி, அடவிநயினாா் கோயில் அணைக்கு நீா்வரத்து 80 கன அடி என்ற அளவில் உள்ளது.

மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்- பாபநாசம் அணை 32, சோ்வலாறு அணை 28, மணிமுத்தாறு அணை 17.4, நம்பியாறு அணை 5, கொடுமுடியாறுஅணை 37, கன்னடியன் அணைக்கட்டு 11.20, மாஞ்சோலை 77, காக்காச்சி 89, நாலுமுக்கு 102,ஊத்து 114, ராதாபுரம் 13.

தென்காசி மாவட்டம்- தென்காசி 11, கடனாநதி அணை 14, ராமநதி அணை 9, ஆய்க்குடி 6, கருப்பாநதி அணை 11.50, செங்கோட்டை 24, குண்டாறு அணை 38, அடவிநயினாா் கோயில் அணை 36.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.