ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:00 am IST

சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன் மகன் மணி (எ) மணிகிரீவன் (21). சீமான் மகன் பிரிதிவிராஜ் (21). இருவரும் பெயிண்டிங் தொழிலாளா்கள்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை கழுகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மணி (எ) மணிகிரீவன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிரிதிவிராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.