தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வண்டலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை! பெற்றோர்கள் போராட்டம்!

வண்டலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம்...

School girl sexually harassed after intruder enters school near Vandalur

உறவினர்கள் போராட்டம்... - X

Published On :25 செப்டம்பர் 2026, 12:16 pm IST

வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் மர்ம கும்பல் புகுந்து, 10 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பள்ளி முன்பாக பெற்றோர்கள், மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக எகிறி குதித்த ஒரு கும்பல், மாணவிக்கு கைக்குட்டை மூலமாக மயக்க மருந்து கொடுத்து கழிவறையில் வைத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தும் பள்ளி தரப்பில் அலட்சியமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

'இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தங்கள் முன் நிறுத்த வேண்டும், பள்ளியில் எங்கள் பெண் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? பள்ளியின் தலைமையாசிரியர் ஏன் எதுவம் சொல்ல மறுக்கிறார்? என்று அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதல்வர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பிரசாரம் செய்யவுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

School girl sexually harassed after intruder enters school near Vandalur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.