பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்ஐஆர் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும்: திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையை திரும்பப் பெற வேண்டும். மேலும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்' என்று மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை திமுக குழு வலியுறுத்தியிருப்பது பற்றி...

Published On :29 அக்டோபர் 2026, 3:54 am IST

"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையை திரும்பப் பெற வேண்டும். மேலும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்' என்று மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் புதன்கிழமை கூட்டாக வலியுறுத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் இருவரும் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் தலைமைத் தேர்தல் தேர்தல் ஆணையர் பதவிநீக்கம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வலியுறுத்த குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடிவு செய்து நேரம் கேட்கப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. எனவே, மின்னஞ்சல் மூலம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை அனுப்பட்டது. குடியரத் தலைவர் அனைவரும் அணுக முடியும் என்ற நிலையில் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தமிழகத்தில் 97.36 லட்சம் வாக்காளர்கள், அதாவது ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியிலேயே ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே அவர் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட இரு தேர்தல் ஆணையர்களுடன் கலந்தாலோசிக்காமலும், அவர்களின் ஒப்புதலைப் பெறாமலும் தலைமைத் தேர்தல் ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்கு மற்ற தேர்தல் ஆணையர்களே தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தில் முறையாக எடுத்து செல்ல குடியரசுத் தலைவர் வலியுறுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.

ஞானேஷ் குமார் விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு

நமது நிருபர்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முவுக்கு திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், "மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் முடிவுகளை மீறி, சட்டவிரோத நடவடிக்கைகள், ஒருதலைபட்சமான, அரசமைப்புக்கு முரணான மற்றும் பாரபட்சமான நடத்தையில் ஈடுபட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தேவையான நடவடிக்கை எடுக்க, சட்டப் பிரிவு 86(2)-இன் கீழ் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியை ரத்து செய்ய வேண்டும்' என அதில் கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையால், மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து 97.37 லட்சம் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டதாகவும், உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்ததாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதன் சட்டபூர்வ செல்லுபடியாகும் தன்மை குறித்து அரசமைப்பின் 143-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கோருமாறும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முந்தைய பட்டியல்களை மீட்டெடுக்கும் அதே வேளையில், சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிந்தைய பட்டியல்களை எதிர்காலத் தேர்தல்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் தரவுத்தளத்தின் சுதந்திரமான தணிக்கை மற்றும் காகித வாக்குப் பதிவுக்குத் திரும்புதல் ஆகிய கோரிக்கைகளும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.