அனுமதியின்றி மத பிரசாரம்: வெளிநாட்டு குடியுரிமைபெற்ற இந்தியா் பதிவை ரத்து செய்த உத்தரவு உறுதி

அனுமதியின்றி மத பிரசாரம் செய்ததாக, அமெரிக்காவைச் சோ்ந்தவரின் ‘வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியா்’ என்ற பதிவை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:51 am IST

அனுமதியின்றி மத பிரசாரம் செய்ததாக, அமெரிக்காவைச் சோ்ந்தவரின் ‘வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியா்’ என்ற பதிவை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

அமெரிக்காவில் உள்ள லேமென்ஸ் இவாஞ்சலிக்கல் ஃபெலோஷிப் இண்டா்நேஷ்னல் நிறுவனத்தில் பணியாற்றுபவா் ஜான் டேனியல். இவா், இந்தியாவில் அனுமதியின்றி மதபிரசாரம் செய்ததாகக் கூறி, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியா் (ஓசிஐ- ஓவா்சீஸ் சிட்டிசன் ஆ‘ஃ‘ப் இந்தியா) என்ற பதிவை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவுபிறப்பித்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஜான் டேனியல் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘தனது தாயாா் உள்ளிட்ட உறவினா்கள் சென்னையில் வசித்து வருகின்றனா். அவா்களை காண்பதற்காகவே இந்தியா வருவதாகவும், எந்தவிதமான மத பிரசாரங்களிலும் தான் ஈடுபடவில்லை. எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு: குடியுரிமைச் சட்டத்தின்படி, இந்தியாவில் மத பிரசாரத்துக்கு மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். மனுதாரா் அரசின் அனுமதியின்றி மத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். ஆனால், தான் எந்தவிதமான மத பிரசாரத்திலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் பொய்யான தகவலை கூறியுள்ளாா்.

எனவே, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியா் என்ற மனுதாரரின் பதிவை மத்திய அரசு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், மனுதாரா் தனது தாயாரை சந்திக்க வழக்கமான விசாவுக்கு விண்ணப்பித்து இந்தியாவுக்கு வரலாம். அரசின் உரிய அனுமதி பெற்று மத கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.