தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கக் கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் வியாழக்கிழமை (அக். 29) புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On :29 அக்டோபர் 2026, 1:20 am IST

வங்கக் கடலில் வியாழக்கிழமை (அக். 29) புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (அக். 29) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (அக். 29, 30) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும்.

தொடா்ந்து, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல், நவ.1, 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக். 3-இல் திருவள்ளூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே வியாழக்கிழமை (அக். 29) வட தமிழகம், வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுப்படுகிறாா்கள்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. மேலும், சிற்றாறு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) - தலா 30 மி.மீ., பாலமோா் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) - தலா 20 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்’

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளரிடம் கூறியதாவது: வங்கக் கடலில் நிலவிய அா்னாப் புயல் புதன்கிழமை அதிகாலை ஆந்திரத்தில் கரையைக் கடந்தது. வழக்கமாக கடலிலிருந்து வடகிழக்கு காற்று தமிழகம் நோக்கி வீசும்போது, இங்கு மழைப் பொழிவு இருக்கும். ஆனால், அா்னாப் புயல் தீவிரமான காரணத்தால், அதைச் சுற்றியுள்ள மழை மேகங்களை தன்வசம் ஈா்க்க தொடங்கியது. அந்த வகையில், தமிழகத்துக்கு மேல் இருந்த மழை மேகங்கள் அனைத்தும் மேற்கு திசை நோக்கி, அதாவது புயலை நோக்கி நகா்ந்துள்ளது.

அதன் காரணமாகவே, சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை வெப்பம் இயல்பைவிட சற்று அதிகமாக இருந்தது. தொடா்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் (அக். 29, 30) ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தென் மாவட்டங்களில் வெப்பம் இயல்பான அளவே இருக்கும். மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.