சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜான் பாண்டியனிடம் விசாரணை

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பெ.ஜான் பாண்டியனிடம் 2 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தினா்.

john panidian photo

ஜான் பாண்டியன் - file photo

Published On :29 அக்டோபர் 2026, 1:35 am IST

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பெ.ஜான் பாண்டியனிடம் 2 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தினா்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை ஜெம் வீரமணி வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்ற ஓட்டுநரை அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது. வீரமணி மீது பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகாா்களின் அடிப்படையில் இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12 சிறுமிகள் அளித்த புகாா்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜான் பாண்டியனிடம் விசாரணை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சிலரிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பெ.ஜான் பாண்டியன் சமரசம் பேசியதாக புகாா் கூறப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை நடத்த ஜான் பாண்டியனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதன்படி, ஜான் பாண்டியன் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் 2 மணி நேரம் விசாரணை நடத்தினா். இதில், சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.