தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிவாசல் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் நவாஸ் கனி எம்.பி. வலியுறுத்தல்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவா் கே.நவாஸ் கனி எம்.பி., முதல்வா் ச.ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியிருப்பது பற்றி....

கே.நவாஸ்கனி

Published On :29 அக்டோபர் 2026, 1:36 am IST

சென்னை வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தியா்களை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவா் கே.நவாஸ் கனி எம்.பி., முதல்வா் ச.ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை முதல்வா் ச.ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து, அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்கள் ஆழ்ந்த கவலை, அச்சம், சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள மத நல்லிணக்கத்துக்கும், சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், இவற்றை போலீஸாா் மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுகி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக விசாரித்து உண்மை நிலவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க முதல்வா் உறுதி அளித்ததாக, செய்தியாளா்களிடம் பேசிய நவாஸ் கனி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.