ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாக தொழிலதிபரை மிரட்டிய வழக்கு: காவல் ஆய்வாளருக்கு ஜாமீன்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமீன் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது பற்றி...

Madras HC

சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 12:26 pm IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரி அகில் என்பவரிடம் ரூ. 40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில்,ஏற்கெனவே ஜாமீன் கோரி முகமது புஹாரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக முகமது புஹாரி தாக்கல் செய்த மனு நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூழல் மாறியுள்ளதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவை இன்னும் கோப்புக்கு எடுக்கப்படவில்லை. மேலும், மனுதாரர் காவல் ஆய்வாளராக உள்ளதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

காவல்துறை வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சிகளை கலைக்கக் கூடாது. தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Summary

Threats to a businessman with Armstrong murder case: Police Inspector granted bail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.